தமிழ் கடவுள் முருகனின் தைப்பூசத் திருநாள்

தமிழ் கடவுள் முருகனின் தைப்பூசத் திருநாள்

   

                                                                 தைப்பூசம்

தமிழ் கடவுள் முருகன்

தமிழ் கடவுளான முருகப்பெருமானின் திருவிழாக்களில் தைப்பூசம் மிக முக்கியமான விழாவாகும். உலகம் முழுவதும் உள்ள தமிழர்களால் தைப்பூசம்  கோலகலமாக கொண்டாடப்படுகிறது.  தைப்பூசத்தன்று முருகப்பெருமான் கோவில்களில் பக்தர்கள் காவடி, பால்குடம் எடுத்து வந்தும் அலகு குத்தியும் தைப்பூச திருவிழாவை கொண்டாடுகின்றனர்.

முருகனின் ஆறுபடை வீடுகள் 

திருப்பரங்குன்றம்(திருப்பரங்குன்றம்)

 திருச்சீரலைவாய்(திருச்செந்தூர்)

திருவாவினன்குடி(பழனி) 

திருவேரகம்(தஞ்சாவூர்)

 

குன்றுதோறாடல் (திருத்தணி)

பழமுதிர்சோலை (மதுரை) 

என முருகப்பெருமானின் அறுபடை வீடுகளிலும் பக்தர்கள் கூட்டம் அலைமோதி வருகிறது.


 

தைப்பூசத்தின்  வரலாறு

சிவன், சூரியனின் அம்சம். அம்பிகை, சந்திரனின் அம்சம் ஆவார்கள். இவர்கள் இருவரும் ஒரே நேர்க்கோட்டில் சந்திக்கும் போது ஆற்றல் உச்சம் பெறும். அதுவே தைப்பூசமாகக் கொண்டாடப்படுகிறது. தைப்பூசத் தினத்தன்று தான் அசுரர்களை அழிக்க முருகப்பெருமானுக்கு அம்பிகை வேல் வழங்கினார். எனவே தான் முருகனின் அருளைப்பெற விரும்புபவர்கள் தைப்பூச தினத்தன்று விரதம் இருந்து முருகனை வழிபடுவார்கள்.

சிறப்புகள்

 

  • தைப்பூசத்தன்று தான் உலகம் தோன்றியதாக நம்பப்படுகிறது .
  • முருகன் தமிழ்க்கடவுள் ஆவார். முருகன் என்றால் அழகு என்று பொருள். முருகன்      தேவர்களின் சேனாதிபதி ஆகையால் இவர் ஒரு போர்க்கடவுள்  ஆவார்.    
  • தை பூசத்தன்று முருகன் தருகாசுரனை வதம் செய்த நிகழ்வு ஒரு விழாவாக      பழனியில் அனுஷ்டிக்கப்படுகிறது.
  • சிவபெருமான் , உமாதேவியுடன்  சிதம்பரத்தில் ஆனந்த நடனம் ஆடி, தரிசனம் அளித்த நாள் தைப்பூசம் என்பர்.
  • சிதம்பரத்திற்கு வந்து அரும்பெரும் திருப்பணிகள் செய்து, நடராஜரை இரணியவர்மன் என்னும் மன்னன் நேருக்கு நேராகத் தரிசித்தது இந்நாளிலேயே. இக்காரணங்களுக்காகவே சிவன் கோயில்களில் தைப்பூசத்தன்று சிறப்பு அபிஷேகங்களுடன் பூஜைகள் நடத்தப்படுகின்றன.
  • தேவர்களில் குருவாகிய பிரகஸ்பதியின் நட்சத்திரம் பூசம் என்பதால் தைப்பூசத்தன்று குருவழிபாடு செய்வது மிகுந்த பலனைத் தரும் என்பர்.

 

தைப்பூச விரத முறை


தைப்பூசத்தன்று அதிகாலையில் எழுந்து குளித்துவிட்டு முருகனை வழிபடுவர். முருகன் பிறந்த தினமாக அறியப்படுவதால் முருகன் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெறும். மேலும் காவடி எடுத்தல் மற்றும் பால் குடம் தூக்குதல் போன்ற நிகழ்வுக்கு பிறகு கோவிலில் அன்னதானம் வழங்ககப்படும். மக்கள் கோவில்களில் முருகனை வேண்டி வழிபடுவது வழக்கம்.

 காவடிகளில் பல வகை உண்டு.

  • அலகு குத்துதல் - நாக்கு, கன்னம், கை, உடம்பின் பிற பகுதிகளில் சிறிய பெரிய வேல் வடிவமுடைய ஊசியால் குத்திக்கொண்டு கோவிலுக்கு வருதல். சிலர் சின்ன ரதம் போன்ற வண்டியை பக்தர்களின் முதுகில் கொக்கிகளால் இணைத்து இழுத்து வருகிறார்கள்.
  • சர்க்கரை காவடி - சர்க்கரை பக்தர்களால் கால்நடையாக எடுத்து வரப்படுகிறது.
  • தீர்த்தக் காவடி -  காவிரி தீர்த்தம் பக்தர்களால் கால்நடையாக எடுத்து வரப்படுகிறது.
  • பறவைக் காவடி - அலகு குத்தியவர் தொங்கியவாறு ஒரு வாகனத்தில் அழைத்து வரப்படுகிறார்.
  • பால் காவடி - பால்குடம் காவடியாக பக்தர்களால் கால்நடையாக எடுத்து வரப்படுகிறது.
  • மச்சக்காவடி - மீன் நீருடன் பக்தர்களால் கால்நடையாக எடுத்து வரப்படுகிறது.
  • மயில் காவடி - மயில் தோகையால் அலங்கரிக்கப்பட்ட காவடி பக்தர்களால் கால்நடையாக எடுத்து வரப்படுகிறது.

 

தமிழகம் மட்டும் இல்லாமல் சிங்கப்பூர், மலேசியா, இலங்கை என தமிழர்கள் வசிக்கும் நாடுகளிலும் உலகம் முழுவதும் உள்ள  தமிழ்கடவுள் முருகன் ஆலயங்களில்  தைப்பூசம் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

Related Posts