கிடைநிலையில் இருந்த விலங்குகளின் முதுகுத்தண்டு வடம், நேராக மாறியதே பரிணாம வளர்ச்சியில் மாபெரும் ஒரு வெற்றி என்று உயிரியல் விஞ்ஞானிகள் கருதுகிறார்கள். இதன் பின்புதான் அறிவு மாற்றும் புத்திசாலித்தனம் மலர்ந்தது. மஹாசிவராத்திரி அன்று தான் இயற்கையிலேயே சக்திநிலை மற்றும் சாந்தநிலை மேல் நோக்கி தூண்டப்படுகிறது. முறையான மந்திர உச்சாடனம் மற்றும் தியானத்தின் துணையுடன் தெய்வீகத்தை இன்னும் ஒரு படி நெருங்கும் வாய்ப்பு நம் அனைவருக்குமே கிடைக்கும் வண்ணம் உள்ளது. வாழ்க்கையில் முறையான ஆன்மீகமே வேண்டாம் என்று எதிலும் ஈடுபடாத ஒவ்வொருவருக்கும் மஹாசிவராத்திரி அன்று சக்தி நிலையில் தூண்டுதல் ஏற்படுகிறது.
யோக சாதனையில் ஈடுபாடுள்ள ஒருவருக்கு, தம் முதுகுதண்டுவடத்தை நேராக வைத்து கொள்வது முக்கியமானது. இதையே வேறுவிதமாக இரவு முழுவதும் கண் விழித்து இருக்க வேண்டும் என்கிறோம்.
மஹாசிவராத்திரி, ஆன்மீக வாழ்வில் இருப்பவர்களுக்கு மட்டுமின்றி, உலகியல், குடும்ப வாழ்வில் இருப்பவர்களுக்கும் மிக முக்கியமானது. குடும்ப வாழ்வில் இருப்பவர்கள் மஹாசிவராத்திரியை சிவனின் திருமண நாளாக கொண்டாடுவார்கள். லட்சிய வாழ்க்கையில் இருப்பவர்களால் சிவன் தன் எதிரிகளை வெற்றி கொண்ட நாளாக பார்க்கப்படுகிறார்கள். ஆனால் யோக கலாச்சாரத்தில், நாம் சிவனை கடவுளாக பார்ப்பதில்லை, யோக கலையை முதன் முதலில் வழங்கிய குருவாக, ஆதிகுருவாகவே பார்க்கிறோம்.
சிவராத்திரியின் பயன்கள்:
மகாசிவராத்திரி என்பது பல கோடி இரவுகள் சேர்ந்து வந்த ராத்திரி. பல இரவுகளிலும் செய்கின்ற பூஜையின் பலனை மகாசிவராத்திரி பூஜை ஒன்றே கொடுத்துவிடும் என்கின்றனர் சிவனடியார்கள்.
இரவு முழுக்க கண்விழித்து நான்கு ஜாம பூஜைகளைச் செய்தால் சகல நலன்களும் பெறலாம் என்பது ஐதீகம். கண்விழிப்பது என்றால், உறங்காமல் இருப்பது என்று பொருளல்ல. ஆன்மா விழித்துக்கொண்டிருக்க வேண்டும். ஆன்மா இறைச் சிந்தனையிலேயே வைத்திருக்க வேண்டும். அதுதான் மகாசிவராத்திரி புண்ணிய நாளின் நோக்கம். இந்த ஆண்டு மகா சிவராத்திரி மார்ச் 11ஆம் தேதி உதயமாகிறது. மகா சிவராத்திரியன்று கண்விழித்து சிவனை வணங்கினால் நாம் செய்த அத்தனை பாவங்களும் நம்மை விட்டு கரைந்து புண்ணியங்களாக மாறிவிடும். அடுத்த வரும் ஆண்டுகளில் நாம் எதிர்பார்க்கும் அளவிற்கு மகத்தான செல்வா வளமும், ஆரோக்கிய வளமும் நம்மை வந்து சேரும் என்பது நம்மில் பலருக்கும் தெரியாத சித்த ரகசியம் ஆகும். தொடர்ந்து 12 சிவராத்திரி இரவுகளில் அண்ணாமலை கிரிவலம் சென்றால், நமது கர்ம வினைகள் அனைத்தும் கரைந்து காணாமல் போய்விடும் என்று சிவனடியார்கள் கூறியுள்ளனர்.
கோடி புண்ணியம் உண்டாகும்:
மகா சிவராத்திரி விரதமானது எமதர்ம பயத்தை நீக்கும். சிவனடியார்களை எமதூதர்கள் நெருங்க அஞ்சுவார்கள் என சிவ புராணம் உரைக்கிறது. சிவராத்திரியின் காலத்தில் மிருத்யுஞ்சய மந்திரத்தை ஓதுவதால் நோய்கள் அனைத்தும் விலகும். சிவராத்திரி அன்று தான தருமங்கள் செய்வதால் கோடிப் புண்ணியம் கிடைக்கும். சிவலிங்கம், ருத்திராட்சம், ரத்தினங்கள், நிவேதனப் பொருட்களை வைத்து அன்னதானம் செய்யலாம்.
திருண்ணாமலை தோன்றிய கதை:
தங்களுக்குள் யார் பெரிது என்று பிரம்மனும், விஷ்ணுவும் வாதிட்டனர். அந்த வாதத்திற்கு பதில் தேடி சிவபெருமானிடம் வந்தனர். அவர்களில் யார் பெரியவர் என்பதை உணர்த்த சிவபெருமான் ஒரு சோதனையை நடத்தினார். எனது தலையையும், பாதத்தையும் காண்பவரே உங்களுள் பெரியவர் என்று கூறி வானத்திற்கும், பூமிக்குமாய் ஜீவஜோதியாய் எழுந்தருளினார் சிவன். அந்த சோதனையை ஏற்று வராக அவதாரம் எடுத்து சிவபெருமானின் காலடியைக் காண பூமியைத் தோண்டிச் சென்றார் விஷ்ணு. அன்னத்தின் வடிவத்தைப் பெற பிரம்மன் சிவபெருமானின் உச்சியைக் காண வானத்திற்கு எழும்பினார். இருவரும் கடுமையாக முயற்சித்தும் சிவனின் தலையையோ, அடியையோ காண முடியவில்லை. தனது தோல்வியை ஒப்புக்கொண்டு விஷ்ணு திரும்பினார்.
உயர உயரப் பறந்து முயற்சி செய்த பிரம்மன் களைப்படைந்திருந்த நிலையில், வானத்தில் இருந்து பூமியை நோக்கி விழுந்துக் கொண்டிருந்த தாழம்பூவைக் கண்டார். எங்கிருந்து வருகிறாய் என்று பிரம்மன் கேட்க, நான் சிவனின் தலைமுடியில் இருந்து விழுந்து கொண்டிருக்கிறேன். யுகம், யுகமாய் பயணித்தும் பூமியை அடையவில்லை என்று கூறியது.தான் சிவனின் தலை முடியைக் கண்டதாக அவரிடம் சாட்சி கூறுமாறு பிரம்மன் கேட்க, தாழம்பூ அதற்கு ஒப்புக்கொண்டு அவ்வாறே சிவபெருமானிடமும் உரைத்தது. பிரம்மனுக்காக தாழம்பூ பொய் கூறியதைக் கேட்ட சிவபெருமான் கோபமுற்று ஜோதி வடிவாய் சாந்தமாய் இருந்தவர், அக்னிப் பிழம்பாக மாறினார். அந்த அக்னியால் ஏற்பட்ட வெப்பம் பூமியை மட்டுமின்றி, சொர்க்கத்தையும் வாட்டியது.சிவனின் உடம்பில் குடிகொண்டிருந்த இந்திரன், எமன், அக்னி, குபேரன் உள்ளிட்ட பாலகர்கள் எட்டு பேரும் வெப்பம் தாங்காமல் வெளியில் வந்து விழுந்தனர்.
சிவபெருமானை அமைதி பெறும்படி வேண்டினர். சக்தியும், தேவர்களும் அவ்வாறே வேண்டினர். அவர்களின் வேண்டுதலை ஏற்ற சிவபெருமான், ஓர் மலையாய் அடங்கி சிறிய ஜோதியாய் அதன் உச்சியில் தென்பட, அனைவரும் வணங்கினர்.அந்த நாளே மகா சிவராத்திரியாக ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப்படுகிறது. அந்த மலையே திருவண்ணாமலையாக அழைக்கப்படுகின்றது.
சிவராத்திரி அன்று நடந்தவை: