கடவுள் காப்பாற்றுவார் என்று பிராத்தனை செய்யும் மக்கள் ஆபத்தில் கடவுளிடம் இரத்தம் தானம் செய்ய கேட்பதில்லை. இவ்வாறு கடவுளுக்கும் மேலான இரத்தம் தானம் செய்யும் நல்ல உள்ளங்களுக்கு இந்த தினம் சமர்ப்பணம். ஒருவர் இரத்த தானம் செய்ய தயங்குகிறார் என்றால் ஒரு நாள் அவருக்கு தேவைப்படும் போது அதன் அர்த்தம் விளங்கும், தயங்கியதற்கு கண்டிப்பாக வருத்தப்படுவார்கள்.
ஒருவரின் இரத்த தானம், ஒருவரின் உயிரை காக்க பயன்படும்.
ரத்த தானம் செய்ய உள்ள தகுதிகள்:-
18 வயது முதல் 60 வயது வரை 50 கிலோவிற்கு மேல் நல்ல ஆரோகியத்துடன் இருந்தால் மட்டும் போதும், இவர்களால் 450 மில்லி லிட்டர் ரத்தம் குடுக்க முடியும்.
மேலும், மூன்று மாதங்களுக்கு ஒரு முறை ஆண்களால் ரத்தம் கொடுக்க முடியும் மற்றும் பெண்களால் நான்கு மாதங்களுக்கு ஒரு முறை ரத்தம் கொடுக்க முடியும்.
இரத்தம் கொடுப்பதால் ஏற்படும் நன்மைகள்:-
மாரடைப்பு- இரத்தத்தின் அளவு சீராக இருக்கும், இரும்பு சத்து கட்டுப்பாடோடு இருக்கும் இதனால் மாரடைப்பு வர வாய்ப்பில்லை.
புற்றுநோய்- நம் உடம்பில் பல இடங்களில் வரும் புற்றுநோய்கள் தடுக்கப்படும்.
இரத்த அழுத்தம்- கொலஸ்ட்ரால் அளவு குறைவதன் மூலம் இரத்த அழுத்தம் ஏற்படாது.
உடலின் கட்டமைப்பு- நம்முள் பலர் அதிக கொழுப்புச்சத்தோடு இருக்கலாம் இரத்த தானம் செய்வதன் மூலம் கொழுப்புச்சத்து கரைந்து உடல் கட்டுப்பாட்டோடு இருக்கும்.
புதிய இரத்த அணுக்கள்- இரத்த தானம் முறையாக செய்வதன் மூலம் புதிய இரத்த அணுக்களின் அளவு அதிகரிக்கும்.