வாட்ஸ்அப் (WhatsApp) நிறுவனம் தொடர்ச்சியாக ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் வகை மொபைல் வாடிக்கையாளர்களுக்கு வெறித்தனமான அப்டேட்களை வெளியிட்டு வருகிறது. தற்போது அந்நிறுவனம் ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் வகை வெர்ஷன்களுக்கு ஃபிங்கர் பிரின்ட் லாக் (Fingerprint Lock) செய்ய முடியும் என்கிற வசதியை வெளியிட்டுள்ளது. இதன் மூலம் வாட்ஸ்அப் செயலியை உங்களால் லாக் செய்து வைக்க முடியும். அதே நேரத்தில் இந்த அப்டேட் சரியாக வேலை செய்ய, உங்கள் ஸ்மார்ட் போனில் ஃபிங்கர் பிரின்ட் சென்சார் (Fingerprint Sensor) இருக்க வேண்டும்.
ஆண்ட்ராய்டு போன்களில் எப்படி இந்த Fingerprint Lock-ஐ பயன்படுத்துவது:
நீங்கள் ஆரம்பிக்கும் முன்னர் வாட்ஸ்அப்பின் 2.19.221 வெர்ஷன், உங்கள் போனில் இருக்கிறதா என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும். பின்னர் இந்த வழிமுறையை பின்பற்றவும்.
1.வாட்ஸ்அப்-ஐ திறக்கவும் > பின்பு மேல் வலது பக்கம் உள்ள 3 புள்ளிகள் இருக்கும் இடத்தை சொடுக்கவும். பின்னர் Settings-க்குள் நுழையவும்.
2.அதைத் தொடர்ந்து Account > Privacy > Fingerprint Lock என்ற வரிசையில் செல்லவும்.
3.இதைத் தொடர்ந்து வரும் திரையில் Unlock with Fingerprint என்கின்ற ஆப்ஷனை ஆன் செய்யவும்.
4.எவ்வளவு நேரத்திற்குப் பின்னர் ஃபிங்கர் பிரின்ட் பயன்படுத்தி வாட்ஸ்அப்-ஐ திறப்பது என்பதையும் செட் செய்ய முடியும். அதில் Immediately, After a minute அல்லது After 30 minutes என்கின்ற 3 ஆப்ஷன்களில் ஒன்றை தேர்வு செய்யலாம்.
5.இதைத் தவிர்த்து, நோட்டிஃபிகேஷனில் என்ன மெஸேஜ் வருகிறது மற்றும் யார் அனுப்பினார்கள் என்பதைப் பார்க்கலாமா வேண்டாமா என்பதையும் முடிவு செய்ய வழிவகை உள்ளது.
இந்த அப்டேட் மூலம் நீங்களும் ஃபிங்கர் பிரின்ட் பயன்படுத்தியே உங்கள் வாட்ஸ்அப்-ஐ திறக்கலாம்.