ஆழியாறு அணை (Aliyar Reservoir) தமிழ்நாடு கோவை மாவட்டத்தில். பொள்ளாச்சி to வால்பாறை சாலையில் அமைந்துள்ள ஒரு நீர்த்தேக்கமாகும். முன்பெல்லாம் ஆண்டு முழுவதும் வற்றாமல் பாயும் ஆழியாறு அணை தற்போது போதிய நீரின்றி அவ்வப்போது காணப்படுகிறது. எப்பொழுதும் கடல்போலக் காட்சியளிக்கும் என்பதால் இதற்கு ஆழியார் என்று பெயரிடப்பட்டது. ஆழி என்பது கடலைக் குறிக்கும். கடல்போன்ற ஆறு என்பதாலேயே இதற்கு ஆழியாறு என்று பெயர். இந்திய நீர் துறை தேக்கத்தின் பட்டியலில் இவ்வணையானது பெரிய அணைகளின் தொகுப்பின் கீழ் உள்ளது.
மேற்கு தொடர்ச்சி மலைகளான வால்பாறையின் அடிவாரத்தில் அமைந்துள்ள இந்த ஆழியாறு அணை கோவையிலிருந்து 65 கி.மீ தூரத்தில் அமைந்துள்ளது. பரம்பிக்குளம் ஆழியாறு பாசன திட்டம் மூலம் கட்டி முடிக்கப்பட்ட அணை . 1962-ல் தமிழக முதல்வராக இருந்த அய்யா காமராஜ் அவர்களால் திறந்துவைக்கப்பட்டது.
ஆழியாறு அணை மேற்கு தொடர்ச்சி மலையில் உற்பத்தியாகின்ற சில ஆறுகளில் ஒன்றாகும்.அங்கு உற்பத்தியாகி தமிழ்நாட்டில் வடமேற்கு திசையில் சீறி பாய்ந்து கேரள மாநிலம் சென்று அங்கு பாரதபுழா ஆற்றில் கலக்கிறது. ஆழியாறு அணைக்கு மேல் நவமலை மின்நிலையம் வழியேயும் பரம்பிக்குளம் அணையிலிருந்து கால்வாய் மூலமாகவும் நீர்வரத்து வரும் வண்ணம் உள்ளது. அதிகபட்ச நீர்வரத்து ஆண்டின்
ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் ஆகும். அம்பராம்பாளையம் தர்கா ஆழியாற்றின் கரையில் உள்ளது. மூன்று புறமும் மலைகள் சூழ்ந்துள்ளது.
சுற்றுலா தளங்கள்:
படகு சவாரி :
உல்லாசப் படகுப் பயண வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. நன்கு பயிற்சிபெற்ற படகு ஓட்டிகளால் படகு சவாரி இயக்கப்படுகிறது, சவாரி செய்யும் மக்கள் அனைவரும் பாதுகாப்பான் முறையில் சவாரி சென்றுவருகின்றனர் இங்கு மனமகிழ்விற்காக பூங்கா, மீன் காட்சியகம் முதலியன தமிழ்நாடு மீன்வளத்துறையினரால் பராமரிக்கப்பட்டு வருகின்றன.
குரங்கு அருவி:
இந்த அணையின் அருகில் சற்றே மலையேறினால் குரங்கு அருவி என்றழைக்கப்படும் சிறு அருவி இருக்கிறது. இந்த அருவியானது மூலிகை நீர் போல மிகவும் தெளிவாக வந்து விழுகிறது. சோதனை சாவடியில் நுழைவு சீட்டு பெற்று கொண்டு அருவிக்கு சென்று நீராடி வரலாம்.
மயிலாடுதுறை ஆறு:
மயிலாடுதுறை ஆனது கோட்டூர் உட்பகுதிக்கு உட்பட்டதாகும் இதை சிறிய அருவி என்றும் அழைப்பார்கள் காரணம் இதன் இயற்கை அழகும் தென்னத்தோப்பின் சூழலும் ஆகும். மலை காலங்களில் இந்த ஆற்றில் குளிப்பதற்கு தடை செய்யப்படும். காரணம் அதிக நீர்வரத்து மற்றும் சுழல் ஆகும். நிறைய மக்கள் விடுமுறை தினங்களில் வந்து நிரம்பி விடுவார்கள்.